காரடையான் நோன்பு விரதம் காரடையான் நோன்பு மாசி மாத இறுதியில் பங்குனி மாத துவக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகை. சாவித்திரி தன் கணவன் ஆயுள் கெட்டியாக இறுக்க வேண்டியே இந்த நோன்பை மேற்கொண்டாள். எமனிடம் இருந்து தன் கணவன் உயிரை மீட்டு வந்தாள். அதன் பின்னர் சாவிதிர்யை போலவே இதர பெண்களும் மாங்கல்ய பாக்யதிற்கு இந்த பழக்கத்தை மேற் கொண்டனர்.
பெயர் காரணம்
கார அடை செய்து, தங்கள் தாலி பாக்கியத்துடன் சுமங்கலி பெண்களாக இறுக்க வேண்டுமென்று வேண்டி விரதம் இருப்பதால் , இதற்கு காரடையான் நோன்பு எனப்பெயர் வந்தது.
நோன்பு கயிறு
காரடையான் நோன்பு அன்று தாலி பாக்கியம் வேண்டி மெல்லிய மஞ்சள் கயிறை கழுத்தில் அணிவர் பெண்கள். இந்த நோன்பு கயிறு மிகவும் புனிதம் வாய்ந்தது. கன்னி பெண்களக்கு நல்ல இல்வாழ்க்கை அமைய வேண்டி மூத்த சுமங்கலிகள் அவர்களுக்கு நோன்பு கயிறு கட்டிவிடுவர் .
காமாட்சி விரதம்
மாங்காட்டில் கம்பா நதியில் மூழ்கி அமர்ந்து மன்னால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார் பார்வதி தேவி. அப்போது ஊழி காலம் ஏற்பட்டதால் , சிவலிங்க சிலைக்கு எதாவுது தீங்கு நேருமோ என்று பயந்து காரடை விரதம் மேற்கொண்டாள். அவ்விரத்தில் மகிமையால் சிவதரிசனம் கிடைத்து. ஏகம்பரச்வேரர் - காமாட்சி திருமணம் நடந்தது. காமாட்சி தேவி குறித்து காரடையான் நோன்பு இருந்ததால் இந்த நோன்பிற்கு 'காமாட்சி விரதம்' என்ற பெயறுமுண்டு.
- மேற்கு கதவுகள்
No comments:
Post a Comment